கூட்டுறவு கடன் சங்கத்தில் முறைகேடு

கூட்டுறவு கடன் சங்கத்தில் முறைகேடு
X

கோக்கலை கூட்டுறவு கடன் சங்கத்தில் முறைகேடு அதிகாரிகள் நேரில் விசாரணை.

கோக்கலை கூட்டுறவு கடன் சங்கத்தில் முறைகேடு அதிகாரிகள் நேரில் விசாரணை.
கோக்கலை கூட்டுறவு கடன்சங்கத்தில் முறைகேடு எழுந்த புகாரில் அதிகாரிகள் நேரில் விசாரித்து வருகின்றனர். எலச்சிபாளையம் ஒன்றியம், கோக்கலை கிராமத்தில் கடந்த பலஆண்டுகளாக தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் இயங்கி வருகின்றது. இங்கு சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான மக்கள் கணக்கு துவங்கி விவசாய கடன், நகைக்கடன் பெற்றுள்ளனர். இங்கு பணியாற்றிவரும் செகரட்டரி ஏ.பெரியசாமி, சி.பெரியசாமி ஆகியோர் வாடிக்கையாளர்கள் செலுத்தும் கடன்தொகைக்கு முறையான ரசீது வழங்காமலும், கணக்கு புத்தகத்தில் வரவு வைக்காமலும், வாடிக்கையாளர்கள் நகைமீது வாங்கிய நகைக்கடனுக்கு அதிகமாக பணம் எடுத்து மோசடி செய்ததாகவும் மக்கள் குற்றம்சாட்டியதையடுத்து கடந்த இருதினங்களாக கூட்டுறவுதுறை அதிகாரிகளான டி.ஆர்.,இந்திரா, எப்.ஓ.,தனசேகரன், எஸ்.ஓ.,ராஜேந்திரன் ஆகியோர் இக்கடன் சங்கத்தில் ஆய்வுமேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து வாடிக்கையாளர்கள் தாங்கள் பெற்ற கடன்தொகை சரியாக உள்ளதா, கட்டிய டெப்பாசிட் தொகை சரியாக உள்ளதா என வங்கியை படையெடுத்த வண்ணம் உள்ளனர். இதுகுறித்து அதிகாரிகளை கேட்டபோது, தற்சமயம் வங்கியில் கணக்குவழக்கு [ஆடிட்டிங்] சரிபார்ப்பு பணிகள் நடந்துவருவதால் ஓரிரு நாட்களில் கணக்குவழக்கு சரிபார்க்கபட்ட பின்னர், முழுவிபரமும் கூறப்படும் என தெரிவித்தனர்.

Tags

Next Story