கூட்டுறவு கடன் சங்கத்தில் முறைகேடு: மக்கள் ஆர்ப்பாட்டம்.

கூட்டுறவு கடன் சங்கத்தில் முறைகேடு:  மக்கள் ஆர்ப்பாட்டம்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள்

கோக்கலை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மக்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோக்கலை தொடக்க வேளாண்மை கடன் சங்கத்தில் விவசாயிகள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். எலச்சிபாளையம் அருகே உள்ள, கோக்கலை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில், சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த சுமார் 1000க்கும் மேற்பட்ட மக்கள் சேமிப்பு கணக்கு துவங்கி விவசாய கடன், நகைக்கடன்கள் பெற்றுள்ளனர்.

இங்கு பணியாற்றிவரும் செகரட்டரி ஏ.பெரியசாமி மற்றும் காசாளர் சி.பெரியசாமி, தற்காலிக பணியாளர் நவீன் ஆகியோர் வாடிக்கையாளர்கள் செலுத்தும் கடன்தொகைக்கு முறையான ரசீது வழங்காமலும், கணக்கு புத்தகத்தில் முறையாக வரவு வைக்காமலும், வாடிக்கையாளர்கள் நகைமீது வாங்கிய நகைக்கடனுக்கு அதிகமாக பணம் எடுத்து மோசடி செய்ததாகவும் மக்கள் குற்றம்சாட்டியதையடுத்து கடந்த சில தினங்களுக்கு முன்னர், கூட்டுறவுதுறை அதிகாரிகள் இந்த வங்கியில் ஆய்வுமேற்கொண்டனர்.

எனவே, ஆய்வுமுடிந்து சிலநாட்கள் ஆனபின்பும் இதுவரையில் முறைக்கேட்டில் பாதிக்கப்பட்டவர்கள் யார்யார் என்பதுகுறித்த தகவலை அதிகாரிகள் தெரிவிக்கப்படவில்லை எனவும், வாடிக்கையாளர்களின் கடன் நிலவரம் வெள்ளைத்தாளில் வங்கி முன்பாக ஒட்டி அவர்களின் வரவு, செலவு முறையாக காண்பிக்கப்பட வேண்டும் எனவும், மொத்தம் எவ்வளவு பணம் மோசடி நடந்துள்ளது எனவும், முறைக்கேட்டில் ஈடுபட்ட பணியாளர்கள் மீது உடனடியாக சட்டரீதியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும்

வலியுறுத்தி நேற்று, வங்கியின் முன்பாக, கவுன்சிலர் சுரேஷ் தலைமையில் 200க்கும் மேற்பட்ட சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த மக்கள் முற்றுகையிட்டு, ஆர்பாட்டம் நடத்தினர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

Tags

Next Story