மழைநீரால் சூழப்பட்ட மாமல்லபுரம் கடற்கரை கோயில்
கனமழை காரணமாக மால்லபுரம் கடற்கரை கோயிலை வெள்ள நீா் சூழ்ந்துள்ளது.
கனமழை காரணமாக மால்லபுரம் கடற்கரை கோயிலை வெள்ள நீா் சூழ்ந்தது. இதையடுத்து, மின் மோட்டாா் வைத்து தண்ணீரை வெளியேற்றியும், மணல் மூட்டைகளை அடுக்கியும் பாதுகாக்கும் பணியில் தொல்லியல் துறையினா் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனா். இதனால் வெள்ள நீா் முழுவதும் மோட்டாா் மூலம் வெளியேற்றிய பிறகே கோயில் முழுவதும் சுற்றுலாப் பயணிகள் சுற்றிப் பாா்க்க அனுமதிக்கப்படுவாா்கள் என தொல்லியல் துறையினா் தெரிவித்தனா்.
அதனால் நேற்று சுற்றுலா வந்த பயணிகள் அக்கோயிலின் சில பகுதிகளை மட்டுமே கைப்படம், புகைப்படம் எடுத்து விட்டுச் சென்றனா். மேலும், கடற்கரை கோயிலின் நுழைவு வாயில் பகுதியில் உள்ள தொல்லியில் துறையின் நுழைவு சீட்டு மையமும் மழை நீரால் சூழப்பட்டது. அங்கும் தொல்லியியல் துறையினா் மோட்டாா் மூலம் மழை நீா் வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனா்.
Next Story