மாமல்லபுரம் பேருந்து நிலைய கட்டுமான பணிகள் மீண்டும் துவக்கம்

மாமல்லபுரம் பேருந்து நிலைய  கட்டுமான பணிகள் மீண்டும் துவக்கம்
மாமல்லபுரம் பேருந்து நிலைய கட்டுமான பணிகள் மீண்டும் துவக்கம்
மாமல்லபுரம் பேருந்து நிலைய கட்டுமான பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம்,மாமல்லபுரத்தில், லோக்சபா தேர்தலுக்கு முன், பேருந்து நிலைய கட்டுமான பணிகளுக்கு பூமிபூஜை நடத்தியும், பணிகள் துவக்காமல் தாமதமானது. இரண்டு மாதங்கள் கடந்து, தற்போது கான்கிரீட் கலவை தயாரிப்பு பிளான்ட் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் விறுவிறுவென துவக்கப்பட்டுள்ளது.

மாமல்லபுத்தில், சி.எம்.டி.ஏ., எனப்படும் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம், 90.50 கோடி ரூபாய் மதிப்பில், புதிய பேருந்து நிலையம் அமைக்கிறது. இந்நிலையம், பகிங்ஹாம் கால்வாய் அருகில், 6.79 ஏக்கரில் அமைகிறது. தரைத்தளத்தில் வாகனங்கள் நிறுத்துமிடம்,

மேல்தளத்தில் பேருந்துகள் நிறுத்துமிடம், பயணியர் காத்திருக்கும் கூடம், கடைகள் உள்ளிட்டவற்றுடன் அமைக்கப்படும். முதல்வர் ஸ்டாலின், பிப்., 27ம் தேதி, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக அடிக்கல் நாட்டி, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசன், மார்ச் 13ம் தேதி, பூமிபூஜையுடன் துவக்கி வைத்தார். ஒப்பந்த நிறுவனத்தினர், நிலத்தடி 'பைலிங்' இறக்கும் ஏற்பாடுகளை துவக்கிய நிலையில், பின் பணிகள் நடக்கவில்லை. தேர்தல் அவசரத்திற்காக அடிக்கல் நாட்டப்பட்டு, சர்ச்சைகளால் பணிகள் நிறுத்தப்பட்டதாக, அப்போது சர்ச்சை ஏற்பட்டது.

இந்நிலையில், கான்கிரீட் கலவை தயாரிப்பு பிளான்ட் அமைப்பது, பைலிங் இரும்பு உருளைகள் தயாரிப்பது என, தற்போது பணிகள் துவக்கப்பட்டு, நடைபெற்று வருகின்றன.

Tags

Next Story