மாமல்லபுரம்: சுற்றுலாவாசிகளின் வருகையால் அதிகரித்தது வருவாய்
மாமல்லபுரத்தில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்ததால், தொல்லியல் துறைக்கு ரூ.8 லட்சம் வரை வருவாய் கிடைத்துள்ளது.
மாமல்லபுரத்தில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்ததால், தொல்லியல் துறைக்கு ரூ.8 லட்சம் வரை வருவாய் கிடைத்துள்ளது.
மாமல்லபுரத்தில் உள்ள புராதன சின்னங்களான அர்ச்சுனன்தபசு, கடற்கரை கோவில், ஐந்துரதம், வெண்ணை உருண்டை பாறை, புலிக்குகை உள்ளிட்ட கலைச் சிற்பங்களை, மத்திய தொல்லியல்துறை பாதுகாத்து பராமரித்து வருகிறது.இதை அருகில் சென்று தொட்டு பார்த்து ரசிப்பதற்கு வெளிநாட்டு பயணிகளுக்கு ரூ.600, இந்தியருக்கு ரூ.40 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கடந்த வாரத்தில் பள்ளிக்கு அரையாண்டு தேர்வு விடுமுறை மற்றும் புத்தாண்டை முன்னிட்டு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்தது. இதில் கடந்த ஒருவாரத்தில் சுற்றுலா பயணிகளின் வருகையால் தொல்லியல் துறைக்கு ரூ.8லட்சம் வரை வருவாய் கிடைத்து இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
Next Story