பேருந்து டிரைவரை தாக்கி செயின் பறிப்பு - ஒருவர் கைது
கைது
மதுரை மாவட்டம், பேரையூரைச் சேர்ந்தவர் பால்பாண்டியன், 32; ஆம்னி பஸ் டிரைவரான இவர் நேற்று ராமேஸ்வரத்தில் இருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு திருப்பதிக்கு புறப்பட்டார்.
மதியம் 2:30 மணிக்கு கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலுார் அடுத்த கீழத்தாழனுார் அருகே சென்றபோது, அவ்வழியாக வந்த பைக்கிற்கு வழி விடாததால், பைக்கில் வந்த மூவரும், பஸ்சை வழிமறித்து நிறுத்தி டிரைவரிடம் தகராறு செய்தனர். அப்போது, மூவரும், பஸ் கண்ணாடியை உடைத்ததுடன், டிரைவர் அணிந்திருந்த ஒரு சவரன் செயினையும் பறித்துச் சென்றனர். தகவலறிந்த திருக்கோவிலுார் சப் இன்ஸ்பெக்டர் நந்தகோபால் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
அதில், கொட்டாமேட்டைச் சேர்ந்த காளிமுத்து மகன் அரிகிருஷ்ணன்,22; செட்டித்தாங்கல் ராமலிங்கம் மகன் சரண்ராஜ், 30; புதுவேங்கூர் சக்திவேல் மகன் விஜயகுமார், 23; ஆகிய மூவரும் வழிப்பறியில் ஈடுபட்டது தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து போலீசார் வழக்கு பதிந்து அரிகிருஷ்ணனை கைது செய்தனர். மேலும், இருவரை தேடிவருகின்றனர்.