அரசு பேருந்து ஓட்டுநரை தாக்கி, பணி செய்ய விடாமல் தடுத்த நபர் கைது

அரசு பேருந்து ஓட்டுநரை தாக்கி, பணி செய்ய விடாமல் தடுத்த நபர் கைது
காவல் நிலையம் 

கரூர் மாவட்டம் கடவூர் தாலுக்கா, மஞ்ச நாயக்கன்பட்டி, அருகே உள்ள தெற்கு மாணிக்கபுரம் பகுதியைச் சேர்ந்தவர் மோகன்ராஜ் (34). இவர் அரசு பேருந்து ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், நவம்பர் 17ஆம் தேதி இரவு 7:45 மணி அளவில் இவர் பணியில் இருந்த போது, பாகநத்தம் அருகே உள்ள செம்மடை பஸ் ஸ்டாப் அருகே தான் ஓட்டிச் சென்ற அரசு பேருந்தை நிறுத்தி, பயணிகளை இறக்கி விட்டார். அப்போது மது போதையில் அங்கே வந்த கரூர் மாவட்டம், வெஞ்சமாங்கூடலூர் அருகே உள்ள நந்தனூர் பகுதியைச் சேர்ந்த பாஸ்கர் (39) என்பவர், பேருந்து ஓட்டுனர் மோகன்ராஜை தகாத வார்த்தைகளால் பேசி, கற்களால் தாக்கி, பணி செய்ய விடாமல் தடுத்து, மிரட்டல் விடுத்துள்ளார். இது தொடர்பாக மோகன்ராஜ் வெள்ளியணை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், பாஸ்கர் மீது வழக்கு பதிவு செய்து, கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story