வழிபாட்டு தலங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் – வங்கி மேலாளர் கைது

வழிபாட்டு தலங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் – வங்கி மேலாளர் கைது
கைதான கதிரேஷ்
கன்னியாகுமரியில் கோயில் சிலை வைப்பது தொடர்பாக பிரச்சனை எதிர்தரப்பை சிக்க வைக்க வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வங்கி வேலாளரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குமரி மாவட்டத்தில் உள்ள பிரபல தேவாலயங்கள், பள்ளிவாசலகள் மசூதிகளை குறி வைத்து கடந்த சில நாட்களாக வெடிகுண்டு மிரட்டல் கடிதங்கள் அனுப்பப்பட்டன. மாவட்டம் முழுவதும் 25க்கும் மேற்பட்ட தேவாலயங்கள், பள்ளிவாசல்களுக்கு மிரட்டல் கடிதம் வந்தது. இவைகள் அனைத்தும் டைப் செய்யப்பட்டு, குமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் உள்ள மனோகரன், முருகன், செந்தில் பாபு, கிருஷ்ணன் என்ற பெயர்களில் அனுப்பி வைக்கப்பட்டு இருந்தன.

இது தொடர்பாக மாவட்ட எஸ் பி யின் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வந்தது. விசாரணையில் புவியூர் பகுதியில் கோயில் சிலை வைப்பது தொடர்பாக பிரச்சனை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதில் எதிர் தரப்பினரை சிக்க வைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த செயலில் ஈடுபட்டதும் தெரிய வந்தது.

இதன் அடிப்படையில் அகஸ்தீஸ்வரம் புவியூர் பகுதியை சேர்ந்த கதிரேஷ் (34)என்பவர் தான் மிரட்டல் கடிதங்கள் அனுப்பிய நபர் என உறுதி செய்ததையடுத்து, அவரை போலீசார் கைது செய்தனர்.கைதான கதிரேஷ் எம் எஸ் சி கணிதம் படித்த பட்டதாரி. நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் வங்கியில் மேலாளராக உள்ளார்.

Tags

Next Story