தமிழக முதல்வரை அவதூறாக பேசி ஆடியோ வெளியிட்ட நபர் கைது

தமிழக முதல்வரை அவதூறாக பேசி ஆடியோ வெளியிட்ட நபர் கைது

 கைது

சேலம் மாவட்டம் எடப்பாடி ஒன்றியம் பக்கநாடு கிராமம் குண்டுமலைக்காடு பகுதியைச் சேர்ந்த பாலு (37) பாமக பிரமுகர்
தமிழக முதல்வரை பற்றி அவதூறாக பேசி சமூக வலைத்தளங்களில் ஆடியோ பதிவிட்ட பாமக பிரமுகரை பூலாம்பட்டி போலீஸ் சார் கைது செய்துள்ளனர். சேலம் மாவட்டம் எடப்பாடி ஒன்றியம் பக்கநாடு கிராமம் குண்டுமலைக்காடு பகுதியைச் சேர்ந்த பாலு (37) என்பவர் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு திமுகவிலிருந்து விலகி பாமகவில் சேர்ந்தார்.. இதனிடையே நேற்று முன்தினம் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் பற்றி செல்போனில் வாய்ஸ் காலில் அவதூறாக பேசி வாட்ஸ் அப் குரூப்பிலும் சமூக வலைதளத்திலும் வைரலாக பரப்பி உள்ளார். இது குறித்து திமுக சுற்றுச்சூழல் அணி மாவட்ட துணை அமைப்பாளர் வெங்கடாசலம் பாலுவிடம் கேட்டதற்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் இதனால் ஆதங்கப்பட்ட வெங்கடாசலம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த பூலாம்பட்டி போலீசார் பாலுவை கைது செய்து எடப்பாடி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர். தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களை அவதூறாக பேசி வாட்ஸப் குரூப்பிலும் சமூக வலைதளத்திலும் வைரலாக பரப்பிய பாமக பிரமுகரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்த இச்சம்பவம் எடப்பாடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது ...

Tags

Next Story