சீர்காழியில் ஏடிஎம்மில் பணம் செலுத்தியபோது முதியவரை ஏமாற்றியவர் கைது

சீர்காழியில் ஏடிஎம்மில் பணம் செலுத்தியபோது முதியவரை ஏமாற்றியவர் கைது

கைதான வாலிபர்

ஏடிஎம்மில் பணம் செலுத்தும்போது முதியவரை ஏமாற்றியவரை சீர்காழி போலீசார் கைது செய்தனர்.

சீர்காழி பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள ஏடிஎம் மூலம் தனது வங்கி கணக்கில் ரூ.20,000 பணம் செலுத்த வந்த ஒரு முதியவர் அருகிலிருந்த அடையாளம் தெரியாத வாலிபரிடம் உதவி கேட்டுள்ளார்.

அப்போது அந்த வாலிபர் முதலில் இரண்டாயிரம் ரூபாய், பிறகு 18 ஆயிரம் ரூபாயை வங்கி கணக்கிற்கு செலுத்திவிட்டு சென்றுவிட்டார். ஆனால் ரூபாய் இரண்டாயிரம் மட்டுமே முதியவரின் கணக்கில் வரவாக இருந்தது தெரியவந்தது.

ரூ.18000 வரவாகவில்லை. இதுகுறித்து முதியவர் சீர்காழி காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். சீர்காழி காவல் துறையினர் விசாரணை செய்து ரூ.18,000 செலுத்தப்பட்ட வங்கி கணக்கின் முகவரியை கொண்டு தேடி வந்தனர்.

திருமுல்லைவாசல் மீனவர் தெருவை சேர்ந்த ராமதாஸ் என்பவரின் மகன் இனியன் என்பவர் சிக்கினார். அவரைபிடித்து விசாரித்தபோது, முதியவரை ஏமாற்றி தனது வங்கி கணக்கில் ரூ.18ஆயிரத்தை செலுத்தியதை ஒத்துக் கொண்டான்.

சீர்காழி காவல்துறையினர் அவனைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். இனியன் மீது ஏற்கனவே வைத்தீஸ்வரன் கோவில் காவல் நிலையத்தில் வழக்கு உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story