ராணுவ வீரர் மனைவியிடம் ரூ 5 லட்சம் மோசடி செய்தவர் கைது
கைது
வேலை வாங்கி தருவதாக ஏற்பாடு செய்தவர் கைது
குமரி மாவட்டம் அருமனை அருகே குழிவிளையை சேர்ந்தவர் ராணுவ வீரர் ஸ்ரீகுமார் என்பவர் மனைவி ராணி. இவர்களது மகளுக்கு அரசு வேலை வாங்கி தருவதாக ஸ்ரீகுமாரின் பக்கத்து வீட்டை சேர்ந்த அருள்ராஜ் என்பவர் கூறியுள்ளார். இதனை தொடர்ந்து குலசேகரம் பிணந்தோடு பகுதியை சேர்ந்த ஜோசப் அம்பி என்பவரை அழைத்து வந்து, முதலில் 5 லட்சமும் வேலை கிடைத்த பின்பு 5 லட்சம் கொடுக்க வேண்டும் என கூறியுள்ளனர். இதையடுத்து ராணி கடந்த 2022 ஜூலை 29ஆம் தேதி 5 லட்சத்தை ஜோசப் அம்பி என்பவர் வங்கி கணக்கில் செலுத்தினார். ஆனல் மாதங்கள் கடந்த பின்பும் வேலை கிடைக்காததால், ராணி பணத்தை திருப்பி கேட்டுள்ளார். ஆனால் பணத்தை கொடுக்காததால் அருமனை காவல் நிலையத்தில் ராணி புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதற்கிடையில் அருள்ராஜிடம் பணம் பெற்றுக் கொண்ட அம்பி ஜோசப் அம்பி கடந்தாண்டு டிசம்பர் 12ஆம் தேதி திடீரென விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. ஜோசப் அம்பி தற்கொலை வென்று கொண்டதால் பணத்தை கொடுக்க முடியாது என்று அருள்ராஜ் ராணியிடம் கூறியுள்ளார். இது பற்றி ராணி மீண்டும் அருமனை காவல் நிலையத்தில் புகார் செய்தார் செய்தார். இதையடுத்து அருமனை போலீசார் அருள்ராஜை கைது செய்தனர்.
Next Story