புகையிலை பொருட்கள் பதுக்கி விற்பனை செய்த நபர் கைது

புகையிலை பொருட்கள் பதுக்கி விற்பனை செய்த நபர் கைது
X

புகையிலை பொருட்கள் பதுக்கி விற்பனை செய்த நபர் கைது

தேநீர் கடையில் சட்ட விரோதமாக புகையிலை பாக்கெட்டுகளை விற்பனைக்காக பதுக்கி வைத்த நபரை போலீசார் கைது செய்தனர்.
திண்டுக்கல் மதுவிலக்கு போலீஸ் துணை சூப்பிரண்டு சுந்தரபாண்டி மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி, தலைமையில் சப்- இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் மற்றும் போலீசார் திண்டுக்கல் பழைய கரூர் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு உள்ள தேநீர் கடையை சோதனை செய்தனர். அப்போது அங்கு சட்ட விரோதமாக புகையிலை பாக்கெட்டுகளை விற்பனைக்காக பதுக்கி வைத்தது தெரிய வந்தது. இதையடுத்து கடை உரிமையாளர் திண்டுக்கல் ரோஜா நகரை சேர்ந்த வில்பர்ட் (வயது 52) என்பவரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி திண்டுக்கல் சிறையில் அடைத்தனர்.மேலும் அவரிடம் இருந்து 237 புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

Tags

Next Story