விழுப்புரம் 1500கிலோ ரேஷன் அரிசி பதுக்கியவர் கைது
கைது
விழுப்புரம் அருகே 1500 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்த நபரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் அருகே 1500 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்த நபரை போலீசார் கைது செய்தனர். விழுப்புரத்தில் குடிமைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு சப் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார், விழுப்புரம் அருகே அத்தியூர் திருக்கை பகுதியில் நேற்று மாலை ரோந்து சென்றபோது, வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டை பகுதியை சேர்ந்த சுப்பன் மகன் ஏகாம்பரம்(36) என்பவர், ஒரு வீட்டில் 1200 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் ஏகாம்பரம், கக்கனூரில் வைத்திருந்த வாத்து பண்ணைக்காக, விழுப்புரம் அடுத்த அத்தியூர் திருக்கை, கெடார் பிடாகம் உள்ளிட்ட 20 கிராமங்களில், ரேஷன் அரசி வாங்கி வந்து, 30 மூட்டை களில் 1,500 கிலோ பதுக்கி வைத்திருந்தார். இதனையடுத்து, போலீசார் அவரை கைது செய்து, ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.
Next Story