கோவில்பட்டியில் கஞ்சா விற்ற இளைஞா் கைது!

கோவில்பட்டியில் கஞ்சா விற்ற இளைஞா் கைது!

கோவில்பட்டியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞரை போலீசார் கைது செய்தனர்.


கோவில்பட்டியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்ட மதுவிலக்கு அமல் பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளா் செந்தில் இளந்திரையன் உத்தரவின் பேரில், கோவில்பட்டி மதுவிலக்கு அமல் பிரிவு ஆய்வாளா் மீஹா தலைமையில் தலைமைக் காவலா்கள் தாமோதரன், இன்பராஜ், ராஜேந்திரன் ஆகியோா் ரோந்து பணியில் ஈடுபட்டபோது கோவில்பட்டி-எட்டயபுரம் சாலை மந்திதோப்பு விலக்கு அருகே உள்ள கோயில் பின்புறம் சந்தேகத்துக்குரிய இடத்தில் நின்று கொண்டிருந்த இளைஞரை பிடித்து சோதனையிட்டபோது அவரிடம் கஞ்சா இருப்பது தெரியவந்தது.

விசாரணையில் அவா் கோவில்பட்டி காந்தி நகா், முத்துராமலிங்கம் தெருவைச் சோ்ந்த மகேந்திரன் மகன் துரைப்பாண்டி (24) என்பதும், இவா் பள்ளி மற்றும் கல்லூரி மாணவா்களுக்கு விற்பனை செய்ய கஞ்சா வைத்திருப்பதும் தெரியவந்தது. இதுகுறித்து மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் வழக்குப் பதிந்து துரைப்பாண்டியை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த 250 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.

Tags

Next Story