திருவாரூரில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த நபர் அதிரடி கைது
கைது
திருவாரூரில் கஞ்சா விற்பனை செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.
திருவாரூர் நகரப் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த வடகண்டம் புதுத் தெருவை சேர்ந்த வைரக்கண்ணு என்பவரின் மகன் திருஞானம் என்பவரை போலீசார் கைது செய்து அவரிடம் சட்ட விரோதமாக வைத்திருந்த ரூபாய் 11,000 மதிப்புள்ள ஒரு கிலோ 100 கிராம் கஞ்சாவை போலீசார் கைப்பற்றினர் மேலும் அவரை சிறையில் அடைத்தனர் இது போன்ற சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது குண்டர் தரப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது
Tags
Next Story