சலூன் கடையில் சிறுவர்களுக்கு கஞ்சா விற்றவர் கைது
பாண்டியராஜன்
உசிலம்பட்டியில் சலூன் கடையில் சிறுவர்களுக்கு கஞ்சா பொட்டலம் விற்பனை செய்தவரைப் போலீசார் கைது செய்தனர்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியில் கஞ்சா, பான் மாசாலா ,குட்கா உள்ளிட்ட போதைப்பொருட்கள் விற்பனை நடைபெறுவதை தடுக்க போலீசார் அவ்வப்போது ரோந்துப்பணியில் ஈடுபட்டு விற்பனையை நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.இந்நிலையில் பள்ளியில் படிக்கும் சிறுவர்களுக்கு கஞ்சா அதிகளவில் கிடைப்பதாக போலிசாருக்கு ரகசியத்தகவல் வந்தது.இதனையடுத்து போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்ட போது மதுரை ரோட்டிலுள்ள பழைய கண்ணன் தியேட்டர் அருகே மதுரையைச் சேர்ந்த கருப்பையா என்பவரின் மகன் பாண்டியராஜன்(42) பெயருக்கு சலூன் கடை நடத்திக் கொண்டு பள்ளி மாணவர்களை குறி வைத்து சிறு சிறு பொட்டலங்களாக சலூன் கடையில் கஞ்சா விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.இதனையடுத்து பாண்டியராஜனை கைது செய்த உசிலம்பட்டி நகர் காவல் நிலையப் போலீசார் அவரிடமிருந்து 500கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
Tags
Next Story