லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்த நபர் கைது
தென்காசி பகுதிகளில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்த நபர் கைது.
தென்காசி மாவட்டம் தென்காசி பகுதிகளில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவல் அறிந்த தென்காசி காவல் உதவி ஆய்வாளர் கருப்பசாமி விரைந்து சென்று எல்.ஆர்.எஸ் பாளையம் பகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது ஆபத் பள்ளி வாசல் பகுதியை சேர்ந்த சாகுவேல் என்பவர் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை 38,400 ரூபாய் மதிப்புள்ள 900 லாட்டரி சீட்டுகள் விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது. அவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை மற்றும் 16 ஆயிரம் ரூபாய் போலீசார் பறிமுதல் செய்தனர். இது குறித்து தென்காசி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story