சேலத்தில் வாலிபரிடம் கத்திமுனையில் நகை பறித்தவர் கைது !!

சேலத்தில் வாலிபரிடம் கத்திமுனையில் நகை பறித்தவர் கைது !!

கைது

சேலத்தில் வாலிபரிடம் கத்திமுனையில் நகை பறித்தவர் கைது செய்யப்பட்டார்.
சேலம் பொன்னம்மாபேட்டை பகுதியை சேர்ந்தவர் ரகுபதி (வயது 28). இவர் நேற்று முன்தினம் சேலம் அரசு ஆஸ்பத்திரி பின்புறம் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த வாலிபர் ஒருவர் திடீரென வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி ரகுபதி அணிந்திருந்த 2 பவுன் நகையை பறித்து கொண்டு தப்பி சென்று விட்டார். இதுகுறித்து செவ்வாய்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் ரகுபதியிடம் நகை பறித்தது அம்மாபேட்டையை சேர்ந்த தினேஷ் (20) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

Tags

Next Story