மாணவிகளிடம் ஆபாசமாக பேசிய நபர் கைது
மாணவிகளிடம் ஆபாசமாக பேசியவர் கைது
திருவண்ணாமலை மாவட்டம்,கண்டமங்கலம் பகுதியில் மாணவிகளிடம் ஆபாசமாக பேசிய நபரை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம்,கண்டமங்கலம் பகுதியை சேர்ந்த மோகன்ராஜ் (வயது 30) அரசு பள்ளியில் படிக்கும் மாணவிகளை ஆபாசமாக பேசி உள்ளார். மேலும் ஒரு மாணவியை திருமணம் செய்து கொள்வதாக கூறி கட்டிப்பிடித்துள்ளார். இது குறித்த புகாரின் பேரில் கண்ணமங்கலம் காவல் நிலைய போலீசார் மோகன் ராஜை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Next Story