பெண்ணிடம் 4 பவுன் நகையை திருடியவர் கைது
கைது
திருச்சி பேருந்து நிலையத்தில் பெண்ணிடம் நகை பறித்தவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம், சார்லஸ் நகரை சேர்ந்தவர் சேகர். இவரது மனைவி ராஜேஸ்வரி. இவர் திருச்சி மத்திய பஸ் நிலையம் பெண்கள் கழிவறை அருகில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்பொழுது அங்கு வந்த ஒரு மர்ம ஆசாமி ராஜேஸ்வரி கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் தங்க நகையை பறித்துக் கொண்டு அங்கிருந்து ஓடிவிட்டார்.
இது குறித்து ராஜேஸ்வரி கண்டேன்மென்ட் குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சந்தேகத்துக்கிடமான ஒரு நபரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் பெயர் - ரொனால்ட்டு ஏர்போர்ட் ஏ ஆர். எஸ் நகரை சேர்ந்தவர் என்பதும் நகை திருடியவர் என்பதும் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து 4 பவுன் நகையை மீட்டு ரொனால்டை கைது செய்துள்ளனர்.
Next Story