குமரியில் கோவில் உண்டியலை உடைத்து பணம் திருடியவர் கைது

குமரியில் கோவில் உண்டியலை உடைத்து பணம் திருடியவர் கைது
பைல் படம்
குமரியில் கோவில் உண்டியலை உடைத்து பணம் திருடியவர் கைது செய்யப்பட்டார்.

கன்னியாகுமரி அருகே உள்ள தென்தாமரைக் குளம் பகுதியில் பூவியூர் முத்தாரம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று முன்தினம் நள்ளிரவு யாரோ மர்ம நபர்கள் உள்ளே புகுந்து அங்குள்ள உண்டியலை உடைத்து அதில் இருந்து ரூபாய் 10 ஆயிரம் பணத்தை திருடி சென்றுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக பூவியூர் ஊர் தலைவர் முருகேசன் என்பவர் தென்தாமரைக் குளம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த கற்காலய பெருமாள் ( 24) என்பவர் இந்த கோவில் உண்டியலை உடைத்து பணம் திருடியது தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

Tags

Next Story