ஊழியர்களை ஏமாற்றி புதிய இரு சக்கர வாகனத்தை திருடியவர் கைது !

ஊழியர்களை ஏமாற்றி புதிய இரு சக்கர வாகனத்தை திருடியவர் கைது !

கைது

ஊழியர்களை ஏமாற்றி புதிய இரு சக்கர வாகனத்தை திருடியவர் கைது செய்யப்பட்டார்.

போரூர், ஆற்காடு சாலையை சேர்ந்தவர் அலெக்சாண்டர்(41), இவர் அதே பகுதியில் புதிய இருசக்கர வாகனங்கள் விற்பனை செய்யும் ஷோரூமில் மேனேஜராக பணிபுரிந்து வருகிறார்.

கடந்த தினங்களுக்கு முன்பு ஷோ ரூமிற்கு வந்த நபர் ஒருவர் தனது மகளின் பிறந்த நாளுக்கு பரிசாக புதிய இருசக்கர வாகனம் கொடுக்க வேண்டும் எனக் கூறி புதிய இரு சக்கர வாகனத்தை முன் பதிவு செய்து அனைத்து பணிகளும் முடிந்த நிலையில் பணம் கட்டும் நேரத்தில் ஊழியரை அனுப்பினால் வீட்டில் இருந்து பணம் மற்றும் ஆவணங்களை கொடுப்பதாக கூறியதையடுத்து புதிய இருசக்கர வாகனத்தை அந்த நபரிடம் கொடுத்த நிலையில் ஷோரூமில் பணிபுரியும் ஊழியர் ஒருவரையும் உடன் அனுப்பி வைத்தனர்.

வளசரவாக்கம் சென்ற நிலையில் வீடு வந்து விட்டதாக கீழ இறங்குமாறு கூறிய நிலையில் பின்னால் அமர்ந்திருந்த நபர் இறங்கிய நிலையில் திடீரென புதிய மோட்டார் சைக்கிளை வேகமாக எடுத்து கொண்டு அந்த மர்ம நபர் தப்பி சென்றார் இதனால் அதிர்ச்சியடைந்த ஊழியர் இந்த சம்பவம் குறித்து வளசரவாக்கம் போலீசில் புகார் அளித்தனர்.

இந்த புகாரின் பேரில் வளசரவாக்கம் போலீசார் ஷோரூமில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து புதிய இருசக்கர வாகனத்தை திருடி சென்ற நபர் குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் சக்கர வாகனத்தை திருடி சென்றார்.

கோடம்பாக்கத்தை சேர்ந்த சிவகுமார்(43), என்பதும் ஷோரூம் மானேஜரை ஏமாற்றி இருசக்கர வாகனத்தை திருடி சென்றதும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நகை கடையில் ஊழியரின் கவனத்தை திசை திருப்பி 5 பவுன் நகையை திருடி சென்ற சம்பவத்தில் தொடர்புடையவர் என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து புதிய மோட்டார் சைக்கிள், இரண்டு பவுன் நகை பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் வேறு எங்காவது இதுபோன்ற சம்பவத்தில் ஈடுபட்டுள்ளாரா என்பதை குறித்து விசாரித்து வருகின்றனர். இவர் மீது பல்வேறு மோசடி வழக்குகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story