தேனியில் மத உணர்வை சீர்குலைக்கும் வகையில் கருத்து பதிவிட்ட நபர் கைது

கைது செய்யப்பட்ட நபர்
சமூக வலைதள கண்காணிப்புக்குழு அமைக்கப்பட்டு மத உணர்வை சீர்குலைக்கும் வகையில் கருத்து பதிவிடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவ பிரசாத் உத்தரவின் பேரில்,
சமூக வலைத்தளங்களில் மத உணர்வு குறித்தும் சட்ட ஒழுங்கு சீர்குலைக்கும் வகையில் கருத்து பதிவிடும் நபர்களை கண்காணிக்க மாவட்ட சமூக வலைதள கண்காணிப்புக்குழு அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது இதில் கம்பத்தை சேர்ந்த சசிகுமார், முகமது சாதிக், உத்தமபாளையத்தைச் சேர்ந்த ராம் செல்வா ஆகிய மூன்று பேரும் சமூக வலைதளங்களில் வெவ்வேறு நாட்களில் மத ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் கருத்து பதிவிடப்பட்டதால் அவர்கள் மீது தேநீர் மாவட்ட சைபர் களின் காவல் நிலையம் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர்.
இதில் கம்பத்தைச் சேர்ந்த முகமது சாதிக்க விசாரணைக்கு ஆஜராக கோரி அழைத்தும் வராததால் தேனி மாவட்ட சைபர் கிரைம் போலீசார் இன்று அவரை கைது செய்து விசாரணைக்கு பிறகு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர் மேலும் இதுபோன்ற சமூக வலைதளங்களில் மத உணர்வை சீர்குலைக்கும் விதமாகவும் சட்ட ஒழுங்கை சீர்கெடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள்,
மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவ பிரசாத் எச்சரிக்கை விடுத்துள்ளார்
