அண்ணனை தாக்கிய தம்பி அதிரடி கைது

அண்ணனை தாக்கிய தம்பி அதிரடி கைது

அண்ணன் மீது தாக்குதல்

திருநெல்வேலி மாவட்டம்,கங்கைகொண்டானில் சொத்து பிரச்சனையால் அண்ணனை தாக்கிய தம்பி மீது காவல்துறையினர் வழக்குபதிவு செய்தனர்.

திருநெல்வேலி மாவட்டம், கங்கைகொண்டானை சேர்ந்த காளிராஜன் தம்பி ஆறுமுகம். இருவருக்கும் இடையே சொத்து பிரச்சனையில் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் காளிராஜன் நேற்று வீட்டில் இருக்கும்போது அவரை ஆறுமுகம் கையால் தாக்கி மிரட்டல் விடுத்துள்ளார்.

இதுகுறித்து காளிராஜன் அளித்த புகாரின் அடிப்படையில் தாழையூத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு ஆறுமுகத்தை நேற்று கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்த நடவடிக்கை மேற்கொண்டனர்.

Tags

Next Story