விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை

விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை
ஆலங்குளம் அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை
குடும்ப தகராறில் ஆண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

தென்காசி மாவட்டம்,ஆலங்குளம் அருகே அழகாபுரி பாபநாசபுரம் வடக்கு தெருவை சோ்ந்த வணங்காமணி மகன் மாரிச்செல்வம்(36). கூலித் தொழிலாளியான இவருக்கும், அவரது மனைவிக்கும் கருத்துவேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு ஏற்படுமாம். மனமுடைந்து காணப்பட்ட மாரிச்செல்வம் நேற்று மதுவில் களைக்கொல்லி மருத்தை கலந்து குடித்து விட்டு தனது தந்தை கல்லறை அருகே சென்று படுத்து விட்டாராம்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவா் மீட்கப்பட்டு தென்காசி அரசு மருத்துவமனையில் முதலுதவிக்குப் பின்னா், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவா் இன்று உயிரிழந்தாா். இது தொடா்பாக ஆலங்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

Tags

Next Story