தினம் வீட்டில் சண்டை - கூலி தொழிலாளி எடுத்த விபரீத முடிவு

தினம் வீட்டில் சண்டை - கூலி தொழிலாளி எடுத்த விபரீத முடிவு
தொழிலாளி தற்கொலை
குடும்ப குடும்பத் தகராறில் தூக்கு போட்டு கூலித் தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள வடக்கு புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயபால் மகன் பரோஸ் (36). கூலித் தொழிலாளியான பரோஸ் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வீட்டில் ஆள் இல்லாத நேரத்தில் அவர் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார், இது பற்றிய தகவல் கிடைத்ததும் சங்கரன்கோவில் தாலுகா போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இத குறித்து சங்கரன்கோவில் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story