பூதப்பாண்டியில் விஷம் குடித்த கூலி தொழிலாளி சாவு 

பூதப்பாண்டியில் விஷம் குடித்த கூலி தொழிலாளி சாவு 
தற்கொலை 
கன்னியாகுமரி மாவட்டம்,பூதப்பாண்டியில் குடும்ப தகராறில் தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குமரி மாவட்டம், பூதப்பாண்டியை அடுத்துள்ள நாவல்காடு பகுதியை சேர்ந்தவர்நம்பி (48) . கூலித் தொழிலாளி. இவருக்கு நளினி என்ற மனைவியும் இரண்டு பிள்ளைகளும் உள்ளனர். இவருக்கு குடிபழக்கம் இருந்ததால் கணவன் மனைவிக்குள் அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கமாம்.

இந்நிலையில் நேற்று முன்தினம் கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட தகராறில் மனைவி கோபித்து கொண்டு அவரது தாய் வீட்டிற்க்கு சென்றுள்ளார். தனிமையில் இருந்த நம்பி நேற்று ஏதோ விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்துள்ளார்.

உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர். சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார். இது குறித்து பூதப்பாண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

Tags

Next Story