வீட்டிலிருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

வீட்டிலிருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு
கன்னியாகுமரி மாவட்டம் , வெள்ளிச்சந்தை அருகே சரல் பகுதியை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (35) கட்டிடத் தொழிலாளி. சம்பவ தினம் இவரது வீட்டில் உள்ள மின்விளக்கு எரியவில்லை. அதில் உள்ள பல்பை மாற்றுவதற்காக இவர் வீட்டில் பின்பகுதியில் இருந்த ஜன்னலில் ஏறினார். அப்போது நிலை தடுமாறி அவர் கீழே விழுந்தார். இதில் பலத்த காயம் அடைந்த அவரை உடனடியாக மீட்டு அருகில் உள்ள ஒரு தரியா ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சையில் இருந்த அவர் சிகிச்சை பலனின்றி ராதாகிருஷ்ணன் நேற்று உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து அவரது தாயார் ராஜம் என்பவர் அளித்த புகாரின் பேரில் வெள்ளிச்சந்தை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
