குளிக்க சென்றவர் மயங்கி தடுமாறி விழுந்ததில் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

குளிக்க சென்றவர் மயங்கி தடுமாறி விழுந்ததில் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

காவல்துறை விசாரணை


திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே ஆமூரில் உள்ள விவசாய நிலத்தில் இருந்த மோட்டார் போர்வெல் தட்ணீரில் குளிக்கச் சென்றவர் மயக்க நிலைக்கு வந்து தடுமாறி கீழே விழுந்ததில் படுகாயம் அடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
திருச்சி மாவட்டம் முசிறி தாலுக்கா ஆமூர் கடைவீதியைச் சேர்ந்தவர் 55 வயதான செல்வராஜ். இவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அப்பகுதி விவசாய நிலத்தில் உள்ள மோட்டார் போர்வெல் தண்ணீரில் குளிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது திடீரென மயக்க நிலை அடைந்து தடுமாறி கீழே விழுந்ததில் படுக்காயம் அடைந்தார்.இந்த சம்பவத்தை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக முசிறி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு தொடர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வாத்தலை காவல் நிலையத்தில் அவரது உறவினர் கொடுத்த புகாரின் பேரில் வாத்தலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags

Next Story