கார் மோதி நடந்து சென்றவர் உயிரிழப்பு

கார் மோதி நடந்து சென்றவர் உயிரிழப்பு
X

கார்மோதி பலி

மளிகை கடைக்கு நடந்து சென்ற விசைத்தறி தொழிலாளி கார் மோதி உயிரிழந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் அடுத்துள்ள காடச்சநல்லூர் பகுதியை சேர்ந்தவர் செங்கோடன் வயது 53. விசைத்தறி கூலி தொழிலாளியான செங்கோடன், நேற்று முன்தினம் மாலை ஐந்து பனை அருகே, உள்ள தனியார் பள்ளி அருகில், மளிகை கடைக்கு செல்வதற்காக வந்துள்ளார். அப்பொழுது திருச்செங்கோட்டில் இருந்து வந்து கொண்டிருந்த கார் ஒன்று எதிர்பாராதவிதமாக அவர் மீது பலமாக மோதியதில் தூக்கி வீசப்பட்டதில் செங்கோடன் பலத்த காயமடைந்தார். அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவரை மீட்டு, பள்ளிப்பாளையம் அரசு அனுப்பி வைத்தனர். மருத்துவமனைக்கு செல்லும் வழியில் பரிதாபமாக செங்கோடன் உயிரிழந்தார். செங்கோடன் மகன் ரமேஷ் அளித்த புகார் அடிப்படையில், பள்ளிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story