கலசபாக்கம் அருகே பைக்கில் இருந்து தவறி விழுந்த நபர் பலி

கலசபாக்கம் அருகே பைக்கில் இருந்து தவறி விழுந்த நபர் பலி

கோப்பு படம் 

கலசப்பாக்கம் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து நிலைத்தடுமாறி கீழே விழுந்த நபர் பரிதாபமாக உயிரிழந்தார்.

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அடுத்த கமலப்புத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் மணியரசு (வயது 30), ஆட்டோ டிரைவர். இவர் மோட்டார் சைக்கிளில் இருந்து நிலைத்தடுமாறி கீழே விழுந்து படுகாயமடைந்தார். இதனையடுத்து அவரை சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில்,

அங்கு சிகிச்சை பலனின்றி மணியரசு பரிதாபமாக உயிரிழந்தார்.இதுகுறித்த புகாரின் பேரில் கலசபாக்கம் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story