மணல் திருட்டில் ஈடுப்பட்டவர் கைது
கைது செய்யப்பட்டவர்
விழுப்புரம் அருகே மணல் திருட்டு வழக்கில் ஈடுபட்டவர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
விழுப்புரம் சாலா மேடு பலராமன் மகன் பாபு (32) இவர் கடந்த 18.02.2024ம் தேதி சொர்ணாவூர், மேல்பாதி சுடுகாடு வழி செல்லும் தென்பெண்ணை ஆற்றங்கரையில் டிராக்டரில் மணல் திருடி கொண்டு சென்ற போது மற்றும் அதனை தடுக்க சென்ற உதவி ஆய்வாளரை தாக்கினார். இது குறித்து ஆய்வாளர் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிந்து அவரை கைது செய்தனர்.
இந்நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபக் சிவாச் பரிந்துரையின் பேரில், மாவட்ட ஆட்சியர் பழனி ஆணைக்கிணங்க, மேற்கண்ட எதிரி பாபு இன்று தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
Next Story