சொத்து தகராற்றில் கொலை - தாய் , மகனுக்கு வலைவீச்சு

சொத்து தகராற்றில் கொலை -  தாய் , மகனுக்கு வலைவீச்சு

கொலை

சேலம் மாவட்டம், தாண்டவராயபுரம் பகுதியில் சொத்து தகராற்றில் கணவனை மனைவி மற்றும் மகன் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே, தாண்டவராயபுரம், மாதா கோவில் தெருவில் வசிப்பவர் லட்சுமணன் மகன் கருப்பண்ணன் (67) இவரது மகன் ராஜாவுக்கு இரண்டு மனைவிகள் உள்ள நிலையில் முதல் மனைவி பிரிந்து இரண்டாது மனைவியுடன் இருந்து வருகிறார்.மேலும் ராஜா கட்டிட கூலி வேலை செய்து வருகிறார்.

இந்த நிலையில் ராஜாவின் தந்தை கருப்பண்ணன் அவரது பெயரில், தாண்டவராயபுரம் மற்றும் வெண்ணந்தூர் பகுதியில் உள்ள சொத்தை மகன் ராஜாவின் முதல் மனைவி மகன் சங்கர் என்பவரின் பெயரில் சொத்தை எழுதி வைக்க கருப்பண்ணன் முடிவு செய்துள்ளார். இதனால், தந்தை கருப்பண்ணன் மகன் ராஜாவுக்கும், கடந்த சில ஆண்டுகளாக தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கருப்பண்ணன் மகன் ராஜா எனது பெயரில் சொத்தை எழுதி வைக்குமாறு ராஜாவும் அவரது தாய் மாரியம்மாளும் கருப்பனிடம் தகராறில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.இந்நிலையில் இன்று வீட்டில் தனியாக இருந்த கருப்பண்ணனை அவரது மனைவி மாரியம்மாள், மகன் ராஜா ஆகிய இருவரும் அரிவாளில் கருப்பணனை சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடினர்.

ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்த கருப்பண்ணன் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்து வந்த ஆத்தூர் நகர போலீசார் உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனை அனுப்பி வைத்த பின்னர், இதுகுறித்து வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய மனைவி மாரியம்மாள், மகன் ராஜாவையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Read MoreRead Less
Next Story