சொத்து தகராறு -தம்பியை ஓட ஓட வெட்டி கொன்ற அண்ணன்

தேன்கனிக்கோட்டை அருகே சொத்துக்காக தம்பியை ஓட ஓட விரட்டி வெட்டிக்கொன்று தலைமறைவாக இருந்த அண்ணன் உட்பட 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அடுத்த லாளிக்கல் கிராமத்தை சேர்ந்தவர் தேவராஜ்(35). உடன்பிறந்த மஞ்சுநாத் உட்பட ஐந்து சகோதரர்கள் ஒருவர் உயிரிழந்த நிலையில் மற்றொருவர் மாற்றுத்திறனாளி கண் பார்வை இல்லாதவர், இவர்கள் குடும்பத்தின் சொந்த நிலம் சுமார் 12 ஏக்கர் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலத்தை மூன்றாக பிரிக்க வேண்டும் என மஞ்சுநாத் தெரிவிக்கவே தேவராஜ் மாற்று திறனாளியை நான் தான் பார்த்து வருகிறேன் எனவே அவர் இருக்கும் வரை நான்கு பிரிவாக தான் சொத்தை பிரிக்க வேண்டும் என தொடர்ந்து தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் சானமாவு என்னுமிடத்தில் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் நிலத்தில் மண் சமன் செய்யும் பணியை கான்ட்ராக்ட் எடுத்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது உணவு இடைவேளையில் அங்குள்ள மரத்தடியில் தனது நான்கு சக்கர வாகனத்தின் அருகே உட்கார்ந்து நில உரிமையாளர் உடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது தேவராஜ் உடன் பிறந்த அண்ணன் மஞ்சுநாத்(40) மற்றும் அவரது கூட்டாளிகள் இருவர் என மூன்று பேர் தேவராஜ் வாகனத்தை வெட்டி பஞ்சர் செய்தும் தேவராஜை விரட்டி விரட்டி அரிவாள்வெட்டியும், இரும்பு ராடால் அடித்துக்கொலை செய்து விட்டு தலைமறைவாகி இருந்தனர்.

உத்தனப்பள்ளி போலிசார் இறந்த தேவராஜ் உடலை கைப்பற்றி கிருஷ்ணகிரி மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தபின் விசாரணை நடத்தியதில் அண்ணன் - தம்பிகளுக்கு சொத்து பிரிப்பதில் தகராறு இருந்து வந்தநிலையில் தம்பியை அண்ணன் கொன்றதும் அவரின் கூட்டாளிகளான கன்னசந்திரம் கிராமத்தை சேர்ந்த ஸ்ரீநாத்(28), சந்திர சேகர் (32) ஆகிய மூவரையும் கெலமங்கலம் அருகே கைது செய்தனர். பின்னர் மூவரையும் நீதிமன்ற காவலுக்கு உட் படுத்தப்பட்டு சிறைச்சாலையில் அடைத்தனர்.

Tags

Next Story