பெண்களை கேலி செய்ததை தட்டி கேட்டவருக்கு அடி, உதை - 3 பேர் மீது வழக்கு

பெண்களை கேலி செய்ததை தட்டி கேட்டவருக்கு அடி, உதை - 3 பேர் மீது வழக்கு

காவல் நிலையம் 

ஓமலூர் அருகே பெண்களை கேலி செய்ததை தட்டி கேட்டவரை தாக்கிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே உள்ள திண்டமங்கலம் ஊராட்சி பனங்காட்டூர் பகுதியை சேர்ந்த மாரிமுத்து என்பவருடைய மகன் கார்த்தி உட்பட சிலர் ஒரு மாதத்திற்கு முன்பு கோவிலுக்கு வரும் பெண்களை கேலி கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது. இதை பார்த்த அதே பகுதியை சேர்ந்த கருப்புசாமி என்பவருடைய மகன் கார்த்திகேயன் அதை தட்டி கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கார்த்தி விரோதத்தை மனதில் வைத்துக் கொண்டு கடந்த 24ஆம் தேதி அன்று கார்த்திகேயனை கார்த்தி உட்பட பலர் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த கார்த்திகேயனை அக்கம் பக்கம் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஓமலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அங்கு சிகிச்சை பெற்று வந்த கார்த்திகேயன் கொடுத்த புகாரின் பேரில் மாரிமுத்து மகன் கார்த்திக், சின்னபையன் மகன் லோகு மற்றும் சேர்மதி என்பவருடைய மகன் மணி ஆகியோர் மீது தொளசம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story