பஸ் நிலையத்தில் காயத்துடன் உயிருக்கு போராடிய நபர்

பஸ் நிலையத்தில் காயத்துடன் உயிருக்கு போராடிய நபர்

கருங்கல் பஸ் நிலையத்தில் முகம் சிதைந்த நிலையில் காயத்துடன் உயிருக்கு போராடிய நபரால் பரபரப்பு உண்டானது. 

கருங்கல் பஸ் நிலையத்தில் முகம் சிதைந்த நிலையில் காயத்துடன் உயிருக்கு போராடிய நபரால் பரபரப்பு உண்டானது.

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் பஸ் நிலையத்தில் இன்று காலை வழக்கம் போல் கடைகளை திறப்பதற்காக வியாபாரிகளும் பஸ் பயணிகளும் வரத் தொடங்கினார். அப்போது அங்குள்ள ஒரு கடையின் முன் புறம் முகம் சிதைந்த நிலையில் ரத்த வெள்ளத்தில் ஒருவர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்ததை கண்டு பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

அந்த நபருக்கு சுமார் 45 வயது இருக்கலாம் எனது கூறப்படுகிறது.உடனடியாக பொதுமக்கள் கருங்கல் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசாரும் சம்பவ இடத்திற்கு வந்து ரத்த வெள்ளத்தில் கிடந்த நபரை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அதற்குள் அந்த நபர் சுயந்தனைவைஇழந்து விட்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் டாக்டர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.

நேற்று இரவில் யாரேனும் அவரை கொலை செய்யும் நோக்கத்தில் தாக்குதல் நடத்தி இருக்கலாம் என தெரிகிறது.இவர் எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்தும் கருங்கல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில் கருங்கல் பஸ் நிலையத்தில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளையும் போலீசார ஆய்வு செய்து வருகின்றனர்.

Tags

Next Story