கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த வழக்கில் ஒருவர் கைது

கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த வழக்கில் ஒருவர் கைது

கைது

கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த வழக்கில் ஒருவர் கைது. போலீசார் நடவடிக்கை.
சேலம் கிச்சிப்பாளையம் அவுசிங் போர்டு குறிஞ்சி நகரைச் சேர்ந்தவர் தனபால். இவரது மகன் தனசேகர் (30). இவர் சம்பவத்தன்று சன்னியாசிகுண்டு மெயின் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த 2 பேர் அவரை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த பணத்தை பறித்து சென்றனர்.இது குறித்து தனசேகர் கிச்சிப்பாளையம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கஸ்தூரிபாய் தெருவை சேர்ந்த பிரபு என்ற கூழை பிரபு (24) எஸ்.எம்.சி. காலனி மாரியம்மன் கோவிலை சேர்ந்த விஜய் என்கிற ஓசி விஜய் (24) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் விஜயை கைது செய்தனர். தலைமறைவான பிரபுவை தேடி வருகின்றனர்.

Tags

Next Story