உறவினரை அரிவாளால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவர் கைது

உறவினரை அரிவாளால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவர் கைது
X

உறவினரை தாக்கியவர் கைது

பசுவந்தனை அருகே முன் விரோதத்தில் உறவினரை அரிவாளால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம், பசுவந்தனை அருகே முன் விரோதத்தில் உறவினரை அரிவாளால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மாவட்டம், பசுவந்தனை அருகே அச்சங்குளம் பகுதியைச் சேர்ந்த ஐயம்பிள்ளை மகன் ராஜ் (58) என்பவருக்கும், இவரது உறவினரான அதே பகுதியைச் சேர்ந்த ஐயப்பன் மகன் வள்ளிநாயகம் (43) என்பவருக்கும் இடையே நேற்று தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில் ஆத்திரமடைந்த வள்ளிநாயகம், ராஜை அரிவாளால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து ராஜ் அளித்த புகாரின் பேரில் பசுவந்தனை காவல் நிலைய உதவி ஆய்வாளர் ரவீந்திரன் வழக்குபதிவு செய்து வள்ளிநாயகத்தை கைது செய்தார். மேலும் இதுகுறித்து பசுவந்தனை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story