வீடு புகுந்து தாய்-மகளிடம் அத்துமீறியவர் போக்சோவில் கைது
காவல் நிலையம்
காவேரிப்பாக்கம் அருகே வீடு புகுந்து தாய் மற்றும் மகளிடம் அத்துமீறிய நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கத்தை அடுத்த களத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி பாஸ்கர் (40). இவர் அதே பகுதியில் உள்ள ஒரு வீட்டில் அத்துமீறி புகுந்து 35 வயதுடைய பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் கூச்சலிட்டார். அப்போது அவரது மகளிடமும் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் அவளூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் அருள்மொழி, போக்சோ சட்டம் மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டம் என இரு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து பாஸ்கரை கைது செய்தார். பின்னர் அவரை போலீசார் வேலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Next Story