அனுமதியின்றி வெடி தயாரித்தவர் கைது
பறிமுதல் செய்த வெடிமருந்து
கும்பகோணம் அருகே வெடிமருந்து தயாரித்தவரை போலீசார் கைது செய்தனர்.
தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகே உள்ள திருவலஞ்சுழி ரயில்வே கேட் சாலை பகுதியில் வசித்து வருபவர் ஜேசுதாஸ் (வயது 45) இவர் சுவாமிமலை அருகே உள்ள மணப்படையூர் கிராமத்தில் அரசு உரிமம் பெற்று வெடிக்கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் எவ்வித அரசு அனுமதி இல்லாமல், அவரது வீட்டில் வைத்து சட்ட விரோதமாக வெடி தயாரிக்கும் பணி நடந்து வருவதாக சுவாமிமலை காவல் ஆய்வாளர் சிவசெந்தில்குமாருக்கு புகார் வந்தது.
அதன் பேரில் காவல்துறையினர் அவரது வீட்டிற்கு சென்று சோதனை செய்தனர். அப்போது தயாரித்து வைக்கப்பட்டிருந்த நாட்டு வெடிகள், வெடி தயாரிக்க பயன்படும் மருந்துகள், திரி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் ஏசுதாஸை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் சுவாமிமலை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags
Next Story