திருப்பத்தூர் அருகே தாய், மகன் மீது ஆசிட் ஊற்றியவருக்கு 23 ஆண்டு சிறை
நீதிமன்றம்
திருப்பத்தூர் மாவட்டம் தாய், மகன் மீது ஆசிட் ஊற்றியவருக்கு 23 ஆண்டு சிறை திருப்பத்தூர் கோர்ட்டு தீர்ப்பு திருப்பத்தூர், டிச. 14& திருப்பத்தூரில் தாய், மகன் மீது ஆசிட் ஊற்றியவருக்கு 23 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருப்பத்தூர் கோர்ட்டு தீர்ப்பளித்தது.
குடும்ப தகராறு திருப்பத்தூர் பொன்னியம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் பிரபுதேவா (வயது 42) இவருக்கும் பக்கத்து வீட்டை சேர்ந்த கோவிந்தராஜ் (48) என்பவருக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
இந்தநிலையில் கடந்த 2016&ம் ஆண்டு மார்ச் மாதம் 27&ந் தேதி பிரபுதேவாவிற்கும் கோவிந்தராஜூக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது கோவிந்தராஜ் வீட்டில் வைத்திருந்த ஆசிட் பாட்டிலை எடுத்து வந்து பிரபுதேவா மீது ஊற்றினார். மேலும் இதை தடுக்க வந்த பிரபுதேவாவின் தாய் சென்னம்மாள் (54) மீதும் ஆசிட் ஊற்றினார். இதில் பலத்த காயம் அடைந்த 2 பேரும் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். சி
றை தண்டனை இதுகுறித்து பிரபுதேவா கொடுத்த புகாரின் பேரில் திருப்பத்தூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து கோவிந்தராஜை கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு திருப்பத்தூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள சார்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கை விசாரித்த சார்பு நீதிபதி ஹசீனாபானு நேற்று தீர்ப்பு வழங்கினார். அதில் ஆசிட் ஊற்றி கொலை முயற்சியில் ஈடுபட்ட கோவிந்தராசுக்கு 23 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.25 ஆயிரத்து 500 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். பின்னர் அவரை திருப்பத்தூர் டவுன் போலீசார் கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.