கடன் கொடுக்காதால் பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டியவர் கைது!

கடன் கொடுக்காதால் பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டியவர் கைது!

பைல் படம்

திருப்பூரில் கடன் கொடுக்காததால் பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டியவரை வடக்கு காவல்நிவைய போலீசார் கைது செய்தனர்.

திருப்பூரில் கடன் கொடுக்காததால் பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டியவர் கைது! திருப்பூர் கொங்கு மெயின் ரோடு ரங்கநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் சாந்தி (வயது 47) இவர் பனியன் நிறுவனத்தில் பேக்கிங் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் சாந்தி பணியாற்றும் நிறுவனத்தில் அயனிங் மாஸ்டராக செல்லப்பாண்டி (53) என்பவர் பணியாற்றி வந்தார்.

செல்லப்பாண்டி சாந்தியிடம் கடனுக்கு பணம் கேட்டுள்ளார். சாந்தி பணம் கொடுக்க மறுத்துள்ளார் இதனால் ஆத்திரமடைந்த செல்லப்பாண்டி மது போதையில் வந்து சாந்தியிடம் கத்தியை காட்டி மிரட்டி உள்ளார்.இதுகுறித்து சாந்தி அளித்த புகாரின் பேரில் வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து செல்லப்பாண்டியை கைது செய்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story