செய்யாறு அருகே விவசாயிகளுக்கு மேலாண்மை பயிற்சி

செய்யாறு அருகே விவசாயிகளுக்கு மேலாண்மை பயிற்சி

பயிற்சியில் கலந்து கொண்டவர்கள்

செய்யாறு அருகே வேளாண்மை துறை சார்பில் விவசாயிகளுக்கு மணிலா பயிர் குறித்து மேலாண்மை பயிற்சி நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் வட்டாரம் பெருங்கட்டூர் கிராமத்தில் மணிலா பெயரில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை என்ற தலைப்பில் பண்ணை பள்ளி பயிற்சி நடைபெற்றது.

இதற்குவட்டார வேளாண் அலுவலர் ரேணுகாதேவி தலைமை தாங்கி பண்ணை பள்ளியின் முக்கியத்துவம் மற்றும் பயன்பாடுகள் பற்றி விவசாயிகளுக்கு விளக்கி னார்.துணை வேளாண் அலுவலர் சுப்பிரமணியம் முன்னிலை வகித்தார்.தொழில் நுட்ப ஆலோசகராக ஓய்வு பெற்ற துணை வேளாண் அலுவலர் அண்ணா மலை கலந்து கொண்டு விவசாயிகளுக்கு மணிலா நிலத்தில் விதைப்பதற்கு முன் கடைபிடிக்கப்பட வேண்டிய தொழில் நுட்பங்களான நிலம் தயாரித்தல், தொழு உரம் இடுதல்,

விதை தேர்வு செய்தல் உட்பட பல்வேறு முறைகள் குறித்து விளக்கினார். பூஞ்சான விதை நேர்த்தி மற்றும் ரைசோபியம் விதை நேர்த்தி குறித்து செயல் விளக்கங் கள் விவசாயிகளிடையே செய்து காண்பிக்கப்பட்டது.

இப்பண்ணை பள்ளியில் 25 விவசாயிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர். இதேபோல் செய்யாறு வட்டாரம் வடங்கம்பட்டு கிராமத்தில் பண்ணை பள்ளியின் வேளாண் தொழில் வகுப்புகள் விவசாயிகளி நுட்ப மேலாண் முகமை விவசாயிகளுக்கு மணிலா பயிரில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மைகுறித்த பயிற்சி நடந்தது.

இப்பயிற்சியில் வேளாண் உதவி இயக்குநர் சண்முகம் தலைமை தாங்கி மணிலா விதை நேர்த்தி மற்றும் உரநிர்வாகம் குறித்தும் ஓய்வு பெற்ற துணை வேளாண் அலுவலர் சம்பத் மணிலா பயிரில் களை மேலாண்மை மற்றும் விதைப்பு மற்றும் பூச்சி நோய் கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து விரி வாக எடுத்துரைத்தார். உதவி வேளாண் அலுவலர் அண்ணாமலை வேளாண்மைத்துறையின் மானியங்கள் விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார். திட்டங்கள் மற்றும் இடுபொருட்கள் குறித்து அட்மா திட்ட உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் ஜெயராஜ். தினகரன் ஆகியோர் பயிற்சிக்கான ஏற்பாடுகளை செய்தனர்.

Tags

Next Story