மகளிர் திட்ட நிர்வாகிகளுக்கு மேலாண்மை பயிற்சி
பயிற்சி முகாம்
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் இணை இயக்குனர் திட்ட இயக்குனர் முருகேசன் தலைமையில் உதவி திட்ட அலுவலர் காமராஜ் முன்னிலையில் வட்டார இயக்க மேலாளர் ராஜகோபால் வரவேற்று பேசினார்.
இதில் மகளிர் திட்ட மாவட்ட வள பயிற்றுநர் ஸ்ரீரங்கபாணி வட்டார கூட்டமைப்பின் கடமைகள் பொறுப்புகள் சேவைகள் கூட்டமைப்பின் நிர்வாகிகள் மாற்றம், நிதி மேலாண்மை, கணக்கில் கொள்கை, உள் கட்டுப்பாடு, நிதி அறிக்கை சேமிப்பு திட்டங்கள், கடன் திட்டங்கள்,வாழ்வாதார திட்டங்கள்,நிதி சேவைகள்,காப்பீடுகள் தொழில்நுட்ப உதவிகள், நிதி மேலாண்மை, நிதி மேலாண்மையின் படிநிலைகள்,தீர்மானம் புத்தகம் ,வரவு ரசீது, பணம் செலுத்துதல் ரசீது,ரொக்க புத்தகம், பொது பேரேடு, கடன் பேரேடு, சொத்து இருப்பு பதிவேடு, காசோலை பதிவேடு,பணியாளர்களின் சம்பள பதிவேடு வங்கி அறிக்கை, உள் தணிக்கை,பட்டய தணிக்கை,தர மதிப்பீடு,,நிதிநிலை அறிக்கை, தொழில்நுட்ப சேவைகள்,பதிவேடுகள் பராமரித்தல், அரசுத் திட்டங்கள் மற்றும் பிற துறைகளுடன் ஒருங்கிணைந்து செயல்படுதல்,ஆண்டு திட்டம்,போன்றவை பயிற்சி அளிக்கப்பட்டது.
இதில் வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் தங்கமணி,ரவிச்சந்திரன்,சித்ரா, மகேஸ்வரி,கிருபாதேவி மற்றும் வட்டார வள பயிற்றுநர் திவ்யா ஆகியோர் கலந்து கொண்டனர்.