கோவில் திருவிழாவில் நெருப்பை விழுங்கி பூசாரி அருள் வாக்கு!

கோவில் திருவிழாவில் நெருப்பை விழுங்கி பூசாரி அருள் வாக்கு!

 பூசாரி அருள் வாக்கு 

மணமேல்குடி அருகே மாந்தாங்குடி அக்னி காளியம்மன் கோயிலில் நடந்த வைகாசி திருவிழாவில் நெருப்பை விழுங்கி பூசாரி அருள் வாக்கு வழங்கினார்.

மணமேல்குடி அருகே மாந்தாங்குடியில் பிரசித்தி பெற்ற அக்னி காளியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் 13வது ஆண்டாக வைகாசி திருவிழா கடந்த 2ம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. அன்று முதல் தினமும் அக்னி காளியம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டு வந்தன. முக்கிய நிகழ்ச்சியாக பால்குடம், காவடி எடுப்பு மற்றும் கரகம், மதளை எடுக்கும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடந்தது

.இதில் நுாற்றுக்கணக்கான பக்தர்கள் மதலை சிலையை சுமந்து வந்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர். கோயில் பூசாரி மாரிமுத்து காளியம்மன் வேடமணிந்து, எரியும் நெருப்பு கட்டையை எடுத்து கடித்தும், அக்னி கங்கை விழுங்கியும், நெருப்பு கட்டையை இரு கால்களிலும் தேய்த்துக் கொண்டும் பக்தர்களுக்கு அருள்வாக்கு கூறினார். இதில் மாந்தாங்குடி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story