சங்கிலி கருப்பர் கோயில் திருவிழா!
மணமேல்குடி சங்கிலி கருப்பர்
மணமேல்குடி சங்கிலி கருப்பர் கோயில் வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு திரளான பக்தர்கள் பால்குடம் மற்றும் காவடி எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
மணமேல்குடி சங்கிலி கருப்பர் கோயிலில் 10ம் ஆண்டு வைகாசி விசாக திருவிழா கடந்த 23ம் தேதி காப்புகட்டுதல் மற்றும் பூச்சொரி தலுடன் தொடங்கியது. தினமும் மண்டகப்படிதாரர்களால் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக,ஆராதனைகள் நடந்தன. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான காவடி எடுப்பு திருவிழா நேற்று நடந்தது. தெற்கூர் முத்து மாரியம்மன் கோயிலில் இருந்து ஏராளமான பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து ஊர்வலமாக கோயிலுக்கு வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இரவு அய்யனார் கோயிலில் இருந்து ஆண்கள், பெண்கள் பாலி மற்றும் கரகம் எடுத்து வந்து கோயில் முன்பு குலவையிட்டு கும்மியடித்து சுவாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை பத்தக்காடு கிராமத்தார் மற்றும் மண்டகப்படிதாரர்கள் செய்திருந்தனர்.
Next Story