மானாமதுரை ஐயப்பன் கோவில் கும்பாபிஷேகம் - பக்தர்கள் பங்கேற்பு
கும்பாபிஷேகம்
சரண கோஷங்கள் முழங்க புனித நீர் தெளிக்கப்பட்டது
மானாமதுரை ரயில்வே காலனி பகுதியில் அமைந்துள்ள தர்மசாஸ்தா ஐயப்பன் கோவிலில் கும்பாபிஷேக விழாவிற்காக திருப்பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் பணிகள் முடிவு பெற்று கும்பாபிஷேகத்திற்காக நேற்று முன்தினம் முதல் யாகசாலை பூஜைகள் ஆரம்பமாகி துவங்கி நடைபெற்று வந்தன. நேற்று காலை யாகசாலையில் இருந்து புனித நீர் அடங்கிய கடங்களை சிவாச்சாரியார்கள் ஊர்வலமாக கொண்டு சென்று கோயிலை வலம் வந்து பின்னர் கோவில் கோபுரத்திற்கு கொண்டு சென்று புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தினர். இதனைத் தொடர்ந்து ஐயப்பனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்று பின்னர் தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இக்கும்பாபிஷேக விழாவில் மானாமதுரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் கலந்து கொண்டனர். இக்கும்பாபிஷேக விழாவிற்கான ஏற்பாடுகளை தர்மசாஸ்தா ஐயப்ப பக்தர்கள் செய்திருந்தனர்.
Next Story