மானாமதுரை தனி தொகுதியை, பொது தொகுதியாக மாற்ற வேண்டும்

மானாமதுரை தனி தொகுதியை, பொது தொகுதியாக மாற்ற வேண்டும்

மானாமதுரை தனித்தொகுதியை பொதுத் தொகுதியாக மாற்ற வேண்டும் என 8ஆம் நம்பர் இயக்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


மானாமதுரை தனித்தொகுதியை பொதுத் தொகுதியாக மாற்ற வேண்டும் என 8ஆம் நம்பர் இயக்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை சட்டமன்ற தொகுதி கடந்த 48 ஆண்டாக தனி தொகுதியாகவே நீடித்து வரும் நிலையில் வரும் சட்டசபைதேர்தலுக்கு முன், பொது தொகுதியாக அறிவிக்க வேண்டும் என 8 -ஆம் நம்பர் இயக்க மாநிலத்தலைவர் முருகப்பா கோரிக்கை விடுத்துள்ளார். மானாமதுரை தொகுதியில் , திருப்புவனம், இளையான்குடி , மானாமதுரை ஆகிய 3 தாலுகாக்கள் அடங்கி உள்ளன. 13 ஆண்டுகளுக்கு முன்பாக தனித்தொகுதியாக இருந்த இளையான்குடி, கடந்த 2011ல் தொகுதி சீரமைப்பின்படி அத்தொகுதி கலைக்கப்பட்டு புதிதாக உருவாக்கப்பட்ட மானாமதுரை தொகுதியுடன் இணைக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து பொதுத்தொகுதியாக இருந்த மானாமதுரை சட்டசபை தொகுதியில் முதன்முறையாக 1952 -ல் கிருஷ்ணசாமி அய்யங்கார் எம்எல்ஏ- ஆனார். அதன்பின் காங்கிரஸ், சுதந்திரா கட்சி, தி.மு.க, அதிமுக, தமாகா என அரசியல் கட்சிகள் சார்பில் வெற்றி பெற்றனர். இறுதியாக 1971 -ம் ஆண்டு திமுக சார்பில் திருப்புவனத்தை சேர்ந்த சோணையா (தி.மு.க.,) எம்.எல்.ஏ- வாக தேர்வானார். அவரது பதவி காலம் முடிந்து அடுத்து 1976- ம் ஆண்டில் இத்தொகுதி தனி தொகுதியாக அறிவிக்கப்பட்டது.

தொடர்ந்து 48 ஆண்டாக இத்தொகுதி தனி தொகுதியாகவே நீடித்து வருகிறது. பொதுவாக 3 முறை அல்லது 15 ஆண்டுகள், அரசு விரும்பும் வரை ஒரு தொகுதி தனி தொகுதியாக இருக்கலாம். தமிழக அரசு விரும்பும் வரை தனித்தொகுதி நீடிக்கலாம் என்ற ஒரே ஒரு விதியை வைத்து கொண்டு மானாமதுரையை தனி தொகுதியாகவே நீடிக்கிறது. ஆண்டு தோறும் நவ.15 க்குள் தொகுதியை மாற்றம் செய்வது குறித்து அரசியல் கட்சிகள், பொதுமக்கள் உள்ளிட்டோர் மாவட்ட தேர்தல் அலுவலர் மூலம் தேர்தல் ஆணையத்துக்கு கோரிக்கை வைக்கலாம் என்ற விதி உள்ளது.

ஆனால் பொது தொகுதியாக மாற்ற இதுவரை எந்த அரசியல் கட்சிகளும் கோரிக்கை வைக்கவில்லை. மானாமதுரை தொகுதியில் தொழிற்சாலை, அரசு கல்லூரி, தொழிற்பயிற்சி நிறுவனம் என எதுவும் ஏற்படுத்தப்படவில்லை. அதற்காக இதுவரை இருந்து எம்.எல்.ஏ -க்கள் எவ்வித முயற்சியும் எடுக்கவில்லை என்கிற குறை தொகுதி மக்களிடம் உள்ளது என சிவகங்கை மாவட்ட ஆட்சியரகப்பகுதியில் கோரிக்கை விடுத்துள்ளார்.

Tags

Next Story