சித்திரை திருவிழாவை முன்னிட்டு மஞ்சுவிரட்டு போட்டி

சித்திரை திருவிழாவை முன்னிட்டு மஞ்சுவிரட்டு போட்டி

காளையார்கோவில் அருகே சித்திரை திருவிழாவை முன்னிட்டு மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது.

காளையார்கோவில் அருகே சித்திரை திருவிழாவை முன்னிட்டு மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது.

சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே உள்ள கண்டனிப்பட்டி பகுதியில் உள்ள தீப்பாஞ்சம்மன் கோயில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு வாடி மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது.

இந்த வாடி மஞ்சுவிரட்டு போட்டியில் சிவகங்கை, திண்டுக்கல், மதுரை, புதுக்கோட்டை, இராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுமார் 300 -க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. தொழுவத்திலிருந்து அவிழ்த்துவிடப்பட்ட காளைகளை அடக்குவதற்காக 100 -க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் களமிரக்கப்பட்டன.

இதில், காளைகளை அடக்க முயன்ற 10 -க்கும் மேற்பட்ட வீரர்கள் காயமடைந்தனர். அனைவருக்கும் மஞ்சுவிரட்டு திடல் அருகே அமைக்கப்பட்டிருந்த மருத்துவ முகாமில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. தொழுவத்திலிருந்து சீறிப்பாய்ந்து வந்த காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், வெற்றி பெற்ற காளைகளுக்கும் விழாக்குழுவினரால் பரிசுகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில், சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த மஞ்சுவிரட்டு ரசிகர்கள் ஆயிரக்கணக்கானோர் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் போட்டியை கண்டு களித்தனர்.

Tags

Next Story