கலசமங்கலம் கிராமத்தில் மஞ்சுவிரட்டு விழா

கலசமங்கலம் கிராமத்தில் மஞ்சுவிரட்டு விழா


கலசமங்கலம் கிராமத்தில் மஞ்சுவிரட்டு விழா :200-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்று சீறிப்பாய்ந்து ஓடியது ஆயிரக்கணக்கான மக்கள் கண்டு ரசித்தனர் .


கலசமங்கலம் கிராமத்தில் நடந்த மஞ்சுவிரட்டு விழாவில் 200-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்று சீறிப்பாய்ந்து ஓடியது ஆயிரக்கணக்கான மக்கள் கண்டு ரசித்தனர் .

கலசமங்கலம் கிராமத்தில் மஞ்சுவிரட்டு விழா 200-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்று சீறிப்பாய்ந்து ஓடியது ஆயிரக்கணக்கான மக்கள் கண்டு ரசித்தனர் . வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த கலசமங்கலம் கிராமத்தில் குடியரசு தினத்தை முன்னிட்டு 57ஆவது மஞ்சுவிரட்டு போட்டி இன்று நடந்தது. இதில் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து கொண்டு வரப்பட்ட 200-க்கும் மேற்பட்ட காளைகள் மக்களின் ஆரவாரத்துடன் அவிழ்த்துவிடப்பட்டது.

இதில் காளைகள் மின்னல் போல் சீறிப்பாய்ந்து ஓடியது. குறைந்த நேரத்தில் வேகமாக ஓடி இலக்கை அடைந்த களைகளின் உரிமையாளர்களுக்கு முதல் பரிசு 1 லட்சம், இரண்டாம் பரிசு 75 ஆயிரம், மூன்றாம் பரிசு 50 ஆயிரம் என 57 பரிசுகளும் வழங்கப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான இளைஞர்களும் பொதுமக்களும் பங்கேற்று மகிழ்ச்சியாக கண்டு ரசித்தனர்.

Tags

Next Story